கலை இலக்கிய இரவு நிகழ்ச்சி
மானாமதுரை, செப்.7-– மானாமதுரையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் கலை
மானாமதுரையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் கலை இலக்கிய இரவு நடைபெற்றது.
மானாமதுரை பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து சிலம்பாட்டம்,பொய்க்கால், குதிரை ஆகியவற்றோடு மேள, தாளங்கள் முழங்க நகரின் வழியே ஊர்வலம் சென்றனர். நகராட்சி அலுவலகம் முன் மேடையில் மாணவர்களின் சிலம்பம், கராத்தே, மல்லர் கம்பம், பரதம், பறை இசை, நடனம், நாடக நடைபெற்றது. அரசு பள்ளிகளில் பயின்று மருத்துவப் படிப்பிற்கு தேர்வான மாணவிகளுக்கு மானாமதுரை நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி பரிசளித்தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.