Politics
மோடியின் 25 ஆண்டு பணியை போற்றும் மக்கள் சேவை இயக்கம்; அனைவரும் பங்கேற்க மத்திய அமைச்சர் எல்.முருகன் அழைப்பு

சென்னை: பிரதமர் மோடியின் 25 ஆண்டுகால மக்கள் சேவையை போற்றும் வகையில் நடைபெறும் சேவை இயக்கத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து எல்.முருகன் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:தேசமே முதன்மை என்ற உறுதியுடன், பிரதமர் மோடி 25 ஆண்டுகளாக தொடர்ந்து ஆற்றி வரும் மக்கள் சேவையைப் போற்றும் வகையில் நடைபெறும் 'சேவா சங்கல்ப் அபியான்' பிரசாரத்தில் அனைவரும் பங்கேற்போம்.
அர்ப்பணிப்பு, சேவை மனப்பான்மை மற்றும் சமூக நலன் ஆகியவற்றை வாழ்வின் நோக்கமாகக் கொண்டு, நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி தொடர்ந்து வழங்கி வரும் தலைமைத்துவத்தையும் மக்கள் சேவையையும் நினைவுகூர்வோம்.
வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி, பிரதமர் மோடியின் 25 ஆண்டுகால மக்கள் சேவைப் பயணத்தால் ஊக்கமடைந்து, நாம் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து செயல்படுவோம். இவ்வாறு எல்.முருகன் கூறியுள்ளார்.