கால்நடைத்துறையில் 30 பேருக்கு பதவி உயர்வு
சேலம்: தமிழக கால்நடை துறையில் துணை இயக்குனர்கள், 30 பேருக்கு, இணை இயக்குனர் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை, கால்நடை இயக்குனர் கிருஷ்ணனுன்னி பிறப்பித்துள்ளார்.
அதன்படி சேலம் மாவட்டம் மேச்சேரி ஆட்டின திரவ உறைவிந்து நிலையத்தின் கந்தசாமி, சேலம் கால்நடை இணை இயக்குனர் பொறுப்பை கூடுதலாக கவனித்தார். அவர் திருவண்ணாமலை மண்டல இணை இயக்குனராக பணி அமர்த்தப்பட்டுள்ளார். அவருக்கு பதில் தஞ்சாவூர் முருகன், சேலம் மண்டல இணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல் ராணிப்பேட்டை தீவன அபிவிருந்தி வெங்கடேஸ்வரன் வேலுார் மண்டலம்; மயிலாடுதுறை விஜயகுமார் கரூர்; புதுக்கோட்டை ராமன் தர்மபுரி; பெரம்பலுார் குணசேகர் ஈரோடு; விழுப்புரம் செல்வகுமார் நாமக்கல்; சிவகங்கை கேசவன் கிருஷ்ணகிரி; ஈரோடு முருகன் திருவாரூர்; கிருஷ்ணகிரி நீலவண்ணன் நீலகிரி மண்டலத்துக்கு இணை இயக்குனர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் உள்பட தமிழகம் முழுதும், 30 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.