Health
சுகாதார பணியாளர் ஆர்ப்பாட்டம் நிலுவை ஊதியம் உடனே வழங்கல்
மேட்டூர்; மேட்டூர் நகராட்சியில் ஒப்பந்த நிறுவனம் சார்பில், 134 சுகாதார பணியாளர்கள் பணிபுரிகின்-றனர். அவர்களுக்கு மாதந்தோறும், 1 முதல், 5க்குள் ஊதியம் வழங்கப்படும். ஆனால் கடந்த ஆகஸ்ட் ஊதியம் வழங்கப்
படவில்லை.
பாதிக்கப்பட்ட பணியாளர்கள், சேலம் மாவட்ட ஊராட்சிகள், உள்ளாட்சி ஊழியர் சங்க செயலர் கருப்பண்ணன் தலைமையில் நேற்று காலை, மேட்டூர் பஸ் ஸ்டாண்ட் முன் ஆர்ப்பாட்டம் நடத்-தினர். ஏராளமான பெண் பணியாளர்கள் பங்கேற்-றனர். நகராட்சி சார்பில் உடனடி நடவடிக்கை எடுப்பதாக கூறியதால், அவர்கள் கலைந்து சென்-றனர்.இதுகுறித்து நகராட்சி தரப்பில் கூறுகையில், 'கடந்த மாத ஒப்பந்த தொகை ஒதுக்கிய நிலையில், அதற்கான வரியை செலுத்த-வில்லை. பின் வரி செலுத்தியதால், சுகாதார பணியாளர்கள் வங்கி கணக்கில் ஊதியம் வரவு வைக்கப்பட்டது' என்றனர்.