ரூ.1000000000 மோசடி... தனியார் பள்ளிகளுக்கான அங்கீகார விவகாரத்தில் 177 புகார்கள்... வெளியான ஷாக் தகவல்!

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்றுத் தருவதாக மோசடி செய்ததாக 177 புகார்கள் வந்துள்ளன.
தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்து, மோசடி செய்துள்ளதாக இதுவரை 177 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி, சி.எம்.டி.ஏ அனுமதிகள் மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத்தருவதாகக் கூறி, தமிழகம் முழுவதும் தனியார் பள்ளி நிர்வாகிகளிடமிருந்து நூறு கோடி ரூபாய் வரை வசூலித்து மோசடி செய்ததாக, தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் அரசகுமார் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் அரசகுமார் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க பொருளாளர் முத்துக்குமார், முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் விசாரணைக்கு வந்த போது, காவல் துறை தரப்பில், தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்து, மோசடி செய்துள்ளதாக இதுவரை 177 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணை தொடர்ந்து நடந்து வருவதாகவும், இந்த மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் எனக் கேட்கப்பட்டது.
இதையும் படிங்க: Gold Price In 2036 | தங்கத்தில் இன்று ரூ.50,000 முதலீடு; 2036-ல் அதன் மதிப்பு எவ்வளவு இருக்கும்?
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, காவல்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தார்.
