கப்பல்கள் செல்லும் வகையில் உயர்கோபுரங்கள்: சீனாவின் மெகா ரயில் பாலம் கட்டுமானம் தீவிரம்
சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் 29.2 கி.மீ நீளத்தில் கட்டப்பட்டுவரும் உலகின் மிக நீளமான கடல்வழி ரயில் பாலத்தில் உயர்கோபுர பணிகள் நிறைவு. 2027ல் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்ப்பு.

சீனாவில் ஜெஜியாங் (Zhejiang) மாகாணத்தில் அமைக்கப்பட்டுவரும், உலகின் மிக நீளமான கடல்வழி ரயில் பாலத்தின், கப்பல் போக்குவரத்துக்கான மூன்று வழித்தடங்களில் உயர் கோபுரங்கள் அமைக்கும் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
பணிகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில், கோபுரத்தில் வெடிப்புகள் மூலம் வண்ணப்புகை வெளியிடப்பட்டது.
ஹாங்சோ (Hangzhou) வளைகுடா கடல்வழி அதிவேக ரயில் பாதையின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்டுவரும் 29.2 கிலோமீட்டர் நீளமுள்ள பாலத்தில் ரயில்கள் அதிகபட்சம் 350 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
2027-ஆம் ஆண்டு இந்தப் பாலம் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.