கிராவல் மண் கடத்தல் லாரி பறிமுதல்
காரைக்குடி, செப்.10-சிவகங்கை கனிம வள ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் அலுவலர்கள் பள்ளத்துார் பகுதியில் விசாரணை நடத்தினர்.
அப்போது வடகுடி கண்மாயில் எந்தவித அனுமதியோ, நடைச்சீட்டு இன்றி இயந்திரம் மூலம் லாரியில் கிராவல் மண் கடத்தியது தெரிந்தது. லாரிகளில் 6 யூனிட் கிராவல் மண் கடத்திய போது லாரியை மறித்தனர். அப்போது டிரைவர்கள் தப்பினர். கிராவல் மண்ணுடன் லாரியை கைப்பற்றி பள்ளத்துார் போலீசில் ஒப்படைத்தனர்.