கென்யாவில் கடத்தப்பட்ட 3 இந்தியர்கள் மீட்பு
நைரோபி: கென்யாவில், கடந்த மாதம் கடத்தப்பட்ட மூன்று இந்தியர்கள் மீட்கப்பட்டு, பாதுகாப்பாக தாயகம் திரும்பினர்.
கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள ஜோமோ கென்யாட்டா சர்வதேச விமான நிலையத்துக்கு, பஞ்சாபைச் சேர்ந்த மூன்று பேர், ஆக., 5ல், பயணியர் விமானத்தில் வந்தனர். விமான நிலையத்திற்கு வெளியே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காரில் ஏற சென்ற போது அவர்கள் கடத்தப்பட்டனர்.
போலீசார் விசாரணையில், நைரோபிக்கு அருகே உள்ள கியம்பு மாகாணம், ருய்ரு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மூன்று பேரும் ஆக., 11ல் பத்திரமாக மீட்கப்பட்டனர். மேலும், அங்கு வேலை செய்த கென்யாவைச் சேர்ந்த சிறுமி ஒருவரும் மீட்கப்பட்டார்.
இது தொடர்பாக, ஒரு இந்தியர், இரண்டு பாகிஸ்தானியர்கள், இரண்டு கென்யர்கள் உட்பட ஆறு பேரை கென்யா போலீசார் கைது செய்யப்பட்டனர்.