Sport
கால்பந்து போட்டியில் கேம்போர்டு சாம்பியன்
கோவை: சஹோதயா பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டி, சந்திரகாந்தி பப்ளிக் பள்ளியில் நடந்தது. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான பெண்கள் பிரிவில் கேம்போர்டு சர்வதேசப் பள்ளி சாம்பியன் பட்டம் வென்றது. 20 பள்ளிகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன.
சிறப்பாக விளையாடிய கேம்போர்டு சர்வதேச பள்ளி மாணவிகள்,- 19 வயது பெண்கள் பிரிவில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர். அகரம் பப்ளிக் பள்ளி இரண்டாம் இடம் பெற்றது.
கேம்போர்டு பள்ளி மாணவி துவாரகா, சிறந்த கோல் கீப்பர் விருதை பெற்றார். வெற்றி பெற்ற மாணவிகள், பயிற்சியாளர்கள் மற்றும் உடற்கல்வித் துறையினரை கேம்போர்டு பள்ளி தலைவர் அருள் ரமேஷ், தாளாளர் பூங்கோதை ரமேஷ் பாராட்டினர்.