Politics
கும்மிடியில் த.வெ.க., - எம்.எல்.ஏ., தி.மு.க., மாஜி கூட்டாக ஆய்வு

கும்மிடிப்பூண்டி: தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,வும், த.வெ.க., - எம்.எல்.ஏ.,வும் இணைந்து கள ஆய்வு செய்தது அரசியலில் கவனம் பெற்றுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டை பஜார் பகுதியில் சென்னை - - கொல்கட்ட தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலையில் முறையான வடிகால் வசதி இல்லை. இதனால், சிறுமழைக்கே தண்ணீர் தேங்கி, பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
இதற்கு தீர்வு காண, த.வெ.க., - எம்.எல்.ஏ., விஜயகுமார் நேற்று கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தன் அலுவலகம் அருகே இருந்த தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., கோவிந்தராஜனை சந்தித்து நலம் விசாரித்தார். பின், இருவரும் ஒன்றாக ஆய்வு செய்தனர்.
கோவிந்தராஜன், அப்பகுதி பிரச்னைக்கான காரணங்கள், சிக்கல்கள், தீர்வுகள் குறித்து விஜயகுமாருக்கு ஆலோசனை வழங்கினார். தி.மு.க., -- த.வெ.க., இடையே அரசியல் ரீதியாக மோதல் போக்கு நிலவும் நிலையில், உள்ளூர் பிரச்னைக்காக இருவரும் இணைந்து கள ஆய்வு செய்தது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.