ரத்த வாந்தி எடுத்த டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி சாவு
ஓசூர்; கிருஷ்ணகிரி அடுத்த பூவத்தியை சேர்ந்தவர் சூர்யா, 30, டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. பேரிகை, மாருதி நகரில் புதிதாக கட்டி வரும் வீட்டில் தங்கி, கடந்த சில தினங்களாக வேலை பார்த்தார். கடந்த, 1ம் தேதி, வேலை பார்க்கும் இடத்தில் ரத்த வாந்தி எடுத்து, மயங்கிய நிலையில் கிடந்தார்.
அருகிலிருந்தவர்கள் மீட்டு, சூளகிரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்து-வமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் உயிரிழந்தார். பேரிகை போலீசார் விசாரிக்கின்றனர்.