Politics
தாய், தம்பியை வெட்டிய வாலிபர் கைது
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே மது போதையில் தாய் மற்றும் தம்பியை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மனைவி ஜெயா 52. ராமச்சந்திரனை 19 ஆண்டுகளுக்கு முன்பு அவரது உறவினர் ஒருவர் வெட்டிக் கொலை செய்தார். அதன் பின் ஜெயா தனது மகன்கள் கார்மேகம் 27, கோபிநாத் 25 ஆகியோருடன் வசித்து வந்தார். இதில் கார்மேகம் மீது திருட்டு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.
அண்ணன், தம்பி இடையே தகராறு ஏற்பட்ட நிலையில்கோபிநாத் பட்டுக்கோட்டையில் உள்ள டீக்கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் கோபிநாத் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மது போதையில் வந்த கார்மேகம் கோபிநாத்துடன் சண்டை போட்டுள்ளார். அருகில் இருந்த அரிவாளால் கோபிநாத் மற்றும் தடுக்க வந்த தாய் ஜெயாவை வெட்டினார்.
காயமடைந்த இருவரும் ராமநாதபுரம் அரசு மருத்தவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கேணிக்கரை போலீசார் கார்மேகத்தை கைது செய்தனர். –––