Politics
மணவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா
கரூர்:மணவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கந்தசாமி தலைமையில் நடந்தது.
பள்ளி ஆசிரியர், ஆசிரியைகளுக்கு பெற்றோர்-ஆசிரியர் கழக
துணைத்தலைவர் சரவணன் பரிசு வழங்கி பாராட்டி பேசினார். முன்னதாக,
ஆசிரியர்களுக்கு, மாணவர்கள் மலர் துாவி வரவேற்று, இனிப்பு வழங்கினர்.
தான்தோன்றிமலை பஞ்சாயத்து யூனியன் முன்னாள் துணைத்தலைவர் வசந்தி,
பள்ளி தலைமையாசிரியர் மனோகரன், மேலாண்மை குழு தலைவர் ஜோதிமணி,
துணைத்தலைவர் தீபா, உதவி தலைமையா சிரியர் சேகர் உள்பட பலர்
பங்கேற்றனர்.