இதே நாளில் அன்று
செப்டம்பர் 6: மேற்கு வங்க மாநிலம், கொல்கட்டாவில், வங்கி பணியாளரான சுனில் சந்திர ராய் சவுத்ரியின் மகனாக,

மேற்கு வங்க மாநிலம், கொல்கட்டாவில், வங்கி பணியாளரான சுனில் சந்திர ராய் சவுத்ரியின் மகனாக, 1937ல் இதே நாளில் பிறந்தவர், ஜெனரல் சங்கர் ராய் சவுத்ரி.
தந்தைக்கு அடிக்கடி இடமாறுதல் வரவே, பல ஊர் பள்ளிகளில் படித்தார். கல்லுாரியில் குத்துச்சண்டை, கால்பந்து, ஹாக்கி உள்ளிட்ட விளையாட்டுகளில் சிறந்து விளங்கிய இவருக்கு, உடல் கட்டுப்பாடு, துணிச்சல் போன்ற பண்புகள் இயல்பாகவே வளர்ந்தன.
தேசிய மாணவர் படை மற்றும் உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள இந்திய ராணுவப் பள்ளியில் பயிற்சி பெற்ற இவர், 1957ல் இந்திய ராணுவத்தின் கவச படையில் அதிகாரியாக இணைந்தார். 1965ல் நடந்த இந்தியா - பாகிஸ்தான் போர், 1971ல் நடந்த வங்கதேச விடுதலை போரில் பணியாற்றினார்.
இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக பொறுப்பேற்று, 1997ல் ஓய்வு பெற்றார். ராணுவத்தில் நீண்டகால சிறப்பான சேவைக்காக, 'பரம் விசி ஷ்ட் சேவா, சமர் சேவா, பூர்வி ஸ்டார், பஸ்சிமி ஸ்டார்' உள்ளிட்ட விருதுகளை பெற்றார்.
ஓய்வுக்கு பின், மேற்கு வங்கத்தில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட இவருக்கு, இன்று 89வது பிறந்த தினம்!