Politics
ஆசிரியர் தின விழா
சங்கராபுரம்: சங்கராபுரத்தில், ரோட்டரி கிளப் சார்பில் ஆசிரியர் தின விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு, ரோட்டரி தலைவர் துரை தலைமை தாங்கினார். செயலாளர் ஸ்டாலின் வரவேற்றார். மண்டல துணை ஆளுனர் சுதாகரன் வாழ்த்திப் பேசினார். சிறப்பு விருந்தினர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கார்த்திகா, சங்கராபுரம் மற்றும் ரிசிவந்தியம் ஒன்றியத்தில் பணிபுரியும் 65 ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து நினைவுப்பரிசு, ,சான்றிதழ் வழங்கி பேசினார்.
நிகழ்ச்சியில் ரோட்டரி முன்னாள் தலைவர்கள், உறுப்பினர்கள், இன்னர் வீல் கிளப் நிர்வாகிகள் பங்கேற்றனர். ரோட்டரி பொருளாளர் பிரகாசம் நன்றி கூறினார்.