Politics
பழனிவேலு மெட்ரிக் பள்ளியில் விருது வழங்கும் விழா
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் பழனிவேலு மெட்ரிக் பள்ளியில் ஆசிரியர் தினத்தையொட்டி விருது வழங்கும் விழா நடந்தது.
ஓய்வு பெற்ற சி. இ.ஓ., ராஜசேகர் தலைமை தாங்கினார். டாக்டர் மூர்த்தி, முன்னாள் சுகாதார ஆய்வாளர் ஜெயராமன் முன்னிலை வகித்தனர். தாளாளர் தேன்மொழி ராஜேந்திரன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் கல்வியாளர் கோதகுமாருக்கு பள்ளி சார்பில் கல்விச் செஞ்சுடர் விருது வழங்கப்பட்டது.
தொடர்ந்து, தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் 10 பேருக்கு விதை ஊன்றி விருது, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் 45 பேருக்கு தலைமுறை சிற்பி விருது மற்றும் முதல்வர் வாசுகி மேலாளர்கள் செல்லம்மா, மஞ்சுளா, ஐ.டி.ஐ., முதல்வர் நுார்முகமது ஆகியோருக்கு வளர்ச்சியின் வழிகாட்டி விருது வழங்கப்பட்டது.
விழாவில் பயிற்சி அலுவலர் குமரேசன், கம்ப்யூட்டர் ஆசிரியர் சத்தியமூர்த்தி, அலுவலர் ஆனந்தராஜ் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.