Sport
கவுன்ட்டியில் 10 விக்கெட்டுகள் எடுத்த குல்தீப் யாதவ்..! இந்திய அணியில் இடம்பிடிப்பாரா?

இங்கிலாந்தின் கவுன்டி கிரிக்கெட் போட்டியில் அசத்திய குல்தீப் யாதவ் குறித்து...
கவுன்ட்டியில் 10 விக்கெட்டுகள் எடுத்த குல்தீப் யாதவ் - படம்: எக்ஸ் / யார்க்ஷயர் சிசிசி
இங்கிலாந்தில் நடைபெறும் முதல்தர கிரிக்கெட் தொடரான கவுன்டி கிரிக்கெட் போட்டியில் குல்தீப் யாதவ் 10 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார்.
சமீபத்தில் இந்தியாவின் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட்ட குல்தீப் யாதவ் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
இந்திய சுழல் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் (31 வயது) தற்போது கவுன்டியில் விளையாடி வருகிறார். அஸ்வின் ஓய்வுக்குப் பிறகு இவர்மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்திய அணியில் பந்துவீச்சாளர் சிறியதாவது பேட்டிங் செய்ய வேண்டுமென கௌதம் கம்பீர் நினைக்கிறார். அதனால், குல்தீப் தனது வாய்ப்புகளை இழக்கிறார்.
யார்க்ஷயர் அணியில் விளையாடும் குல்தீப் யாதவ் எசெக்ஸ் அணிக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள், இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
பந்துவீச்சில் மட்டுமில்லாமல் பேட்டிங்கிலும் 36 ரன்கள் எடுத்து அணிக்கு உதவினார். இதனால், அந்த அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
குல்தீப் யாதவ் 2017ல் அறிமுகமாகியும் இதுவரை 19 டெஸ்ட்டில் மட்டுமே விளையாடியுள்ளார். முன்னதாக அஸ்வின் - ஜடேஜா இருப்பார்கள்; தற்போது, வாஷிங்டன், அக்ஷர், மானவ் சுதர், சரண்ஸ் ஜெயின் உள்ளதால் குல்தீப் யாதவ் பிளேயிங் லெவனில் பயன்படுத்தப்படாமலேயே இருக்கிறார்.
இந்த 10 விக்கெட்டுகள் எடுத்த விதம் குல்தீப் யாதவ் மீது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இதனால், மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Kuldeep Yadav takes 10 wickets in County cricket... Will he secure a spot in the Indian team?
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.