Politics
மத்திய அரசுக்கு சோனம் வாங்சுக் எச்சரிக்கை: லடாக்கில் மீண்டும் போராட்டம்
லடாக்,லடாக் தொடர்பான கோரிக்கைகளில் மத்திய அரசு உடனடியாக உத்தரவாதம் அளிக்காவிட்டால், மீண்டும் போராட்டம் வெடிக்கும் என்று பிரபல சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் எச்சரி

மத்திய அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் எந்தவிதமான தெளிவான முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் செப்டம்பர் 19 முதல் 24 வரை மீண்டும் பிரம்மாண்ட பாதயாத்திரை மற்றும் தொடர் போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
லடாக்கிற்கு முழுமையான மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். இந்திய அரசியலமைப்பின் 6-வது அட்டவணையின் கீழ் லடாக்கை சேர்க்க வேண்டும். உள்ளூர் மக்களின் நிலம் மற்றும் வேலைவாய்ப்புகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
ஏற்கனவே லடாக் பாதுகாப்புக்காக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்திய சோனம் வாங்சுக், தற்போது மத்திய அரசுக்கு இந்த இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.