முட்டை விலை 5 காசு உயர்வு
நாமக்கல்; நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்-புக்குழு கூட்டம், நேற்று நடந்தது. அதில், முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்-ணையாளர்கள் விவாதித்தனர். இதையடுத்து, 525 காசுக்கு விற்ற முட்டை விலை, 5 காசு உயர்த்ததி, 530 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. முட்டை கொள்முதல் விலை, இரண்டு நாட்களில், 10 காசு உயர்ந்துள்ளதால், பண்ணையாளர்கள் மகிழ்ச்சி-யடைந்துள்ளனர்.
நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை(காசுகளில்) நிலவரம்: சென்னை, 590, ஐத-ராபாத், 535, விஜயவாடா, 575, பர்வாலா, 548, மும்பை, 575, மைசூரு, 575, பெங்களூரு, 560, கோல்கட்டா, 635, டில்லி, 600 என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல்லில், நேற்று நடந்த பண்ணையாளர், வியாபாரிகள் ஒருங்கிணைப்புக்-குழு கூட்டத்தில், ஒரு கிலோ, முட்டைக்கோழி, 120 ரூபாய், பல்லடத்தில் நடந்த உற்பத்தியாளர் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், ஒரு கிலோ கறிக்கோழி, 95 ரூபாய் என, விலை நிர்ணயம் செய்யப்பட்டது.