Religion
விநாயகர் சதுர்த்தி 2026 | ஒரு கைபிடி மாவு போதும்.. வீட்டிலேயே ஈஸியாக பிள்ளையார் சிலை செய்வது எப்படினு தெரிஞ...

Vinayagar Chathurthi | விநாயகர் சதுர்த்திக்கு வீட்டிலேயே உள்ள பொருட்களை வைத்து விநாயகர் சிலை செய்வது எப்படி என தெரிந்து கொள்ளலாம் வாங்க..
இந்துக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தியும் ஒன்று. இந்த நாளில் அனைவரும் விநாயகரை வீட்டில் அழைத்து படையல் போட்டு வழிபட்டு அவரை ஆற்றில் கரைத்து மகிழ்ச்சியாக அனுப்பி வைப்பது வழக்கம்.
இந்த நாளில் விநாயகர் சிலையை வீட்டில் வைத்து வழிபடுவது மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. வட இந்தியா, தென் இந்தியா என அனைத்து இடங்களிலுமே விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படும். இதற்காக கடைகளிலேயே விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும். கடலிலும், ஆற்றிலும் கரைக்கப்படுவதால் இயற்கைக்கு ஏற்ற வகையில் சிலைகளை தயாரிக்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்து வருகிறது. வண்ண நிறமிகளும் பாதிக்காதவாறு இருந்தால் தான் கடலில் உள்ள மீன்கள், தாவரங்களுக்கு பாதிப்புகள் ஏற்படாது என்று சொல்லப்படுகிறது.
முந்தைய காலங்களில் மண் அதிகமாக வீடுகளுக்கு அருகேயே கிடைத்ததால் அனைவரும் வீட்டிலேயே களி மண்ணால் விநாயகர் சிலைகளை செய்து வழிபட்டார்கள். தற்போது சமூகத்தில் வீடுகள் அதிகரித்து வருவதால் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே எப்படி விநாயகர் சிலை செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
வெள்ளை சர்க்கரை (பொடியாக்கியது) – 2 ஸ்பூன்,
நூல் – தேவைக்கு.
செய்முறை: கோதுமை மாவு, மஞ்சள், பால், சுகர், தண்ணீர் என அனைத்தையும் ஒண்ணா சேர்த்து பிசைந்து 10 நிமிடம் ஊற வைத்து விடுங்கள். ஒரு சிறிய பலகையில் பச்சரிசி மாவில் கோலம் போட வேண்டும். அதன் மேல் ஒரு பிள்ளையார் அமர ஒரு ஆசனம் செய்ய வேண்டும். இல்லையென்றால், பச்சரிசியை பலகையில் கொட்டி பரப்பி, அதன் மீது கூட பிள்ளையாரை அமர வைக்கலாம். விநாயகர் செய்யும்போதே சின்னதாக ஒரு தட்டு போன்று செய்தால் கூட நல்லதுதான். அதிலேயே பிள்ளையாரை அமர வைத்து விடலாம்.
பிறகு ஒரு உருண்டையை எடுத்து அதை நீளமாக உருட்டி வளைத்து கால் போல் செய்யுங்கள். ஒரு கால் மேல் இன்னொரு கால் போட்டு அமர்ந்திருப்பது போன்றும் செய்யலாம். அடுத்து, பிள்ளையாருக்கு முக்கியமான அடையாளம் பெரிய வயிறு. பெரிய உருண்டையாக எடுத்து வயிறு போல செய்து அதை கால்களுக்கு நடுவில் வைத்துவிடுங்கள். அதையடுத்து, அதை விட சிறிய உருண்டை ஒன்றைப் பிடித்து, அதை தலையாகச் செய்யுங்கள். ஒரு சிறிய உருண்டையை கை போல் செய்து அதை விரித்து வைத்திருப்பது போல் ஒட்டி விடுங்கள். அப்படியே இன்னொரு கையை செய்து இடது புறமும் ஒட்டி விடுங்கள்.
பின்னர் துதிக்கையை படத்தில் உள்ளது போல் செய்து அதையும் ஒட்டி விடுங்கள். அதன் பிறகு இடுப்பில் ஒரு அரைஞான் கயிறு செய்து போடுங்கள். பிறகு முப்புரி நூல் தோளில் வலமிடமாக படத்தில் காட்டியது போல போடுங்கள். முக்கியமாக நாம் செய்ய வேண்டியது பிள்ளையார் காது. அவரது காது முறம் போன்று இருக்கும். படத்தில் உள்ளது போல் இருபுறமும் காது செய்து வையுங்கள். தலைக்கு சிறியதாக ஒரு உருண்டை செய்து தலையில் கிரீடம் போல அழகாக செய்து வையுங்கள். இப்போது பிள்ளையாருக்குக் கண் வைக்க வேண்டும். அதற்குத் தண்ணீர் தொட்டு கண் உள்ள இடத்தில் கொஞ்சம் அழுத்த வேண்டும். பிறகு 2 மிளகால் கண் வையுங்கள். பிறகு, பட்டை இட்டு எப்படி வேண்டுமோ அப்படி விநாயகரை டெகரேட் செய்துகொள்ளுங்கள். அவ்வளவுதான் அழகான மஞ்சள் பிள்ளையார் தயார். நமது கையாலேயே விநாயகரை செய்த மகிழ்ச்சியும் நமக்குக் கிடைக்கும். இதன் மூலம் விநாயகரின் அருளும் நமக்குக் கிடைக்கும்.
