Arts, culture, entertainment and media
அருப்புக்கோட்டையில் 46 மி.மீ மழை
விருதுநகர்:அருப்புக்கோட்டையில் அதிகபட்சமாக 46 மி.மீ., அளவு மழையளவு பதிவாகியுள்ளது.
மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் துவங்கியதை போல கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பகலில் மக்கள் வெளியே வருவதை தவிர்த்து வருகின்றனர். பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்கள் வெயிலின் தாக்கத்தால் பரிதவித்து வருகின்றனர்.
இதற்கிடையில் கடந்த சில நாட்களாக பகலில் வெயில் வாட்டி வதைத்தாலும் மாலை நேரத்தில் மழை பெய்து வெப்பத்தை தணித்து வருகிறது. நேற்று முன்தினம் முதல் நேற்று காலை 8:00 மணி வரையான நிலவரப்படி திருச்சுழியில் 2 மி.மீ., காரியாபட்டியில் 4.60, ஸ்ரீவில்லிப்புத்துாரில் 2.20, சிவகாசியில் 7, வத்திராயிருப்பில் 28, கோவிலான்குளத்தில் 7, வெம்பக்கோட்டையில் 16.70, விருதுநகரில் 37.40 மி.மீ., மழையளவு பதிவானது. இதில் அதிகபட்சமாக அருப்புக்கோட்டையில் 46 மி.மீ., மழையளவு பதிவானது.
மேலும் நேற்று காலை முதல் வெயில் வெளுத்த நிலையில் மாலையில் விருதுநகரில் லேசான சாரல் மழை பெய்தது. சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பில் ் நேற்று மாலை 5:30 மணி முதல் 40 நிமிடங்கள் பரவலாக மழை பெய்தது.