Arts, culture, entertainment and media
என் வாழ்க்கையில் நடித்தவனுக்கு ஆஸ்கர் கொடுக்கலாம்: ஆர்த்தி
ஆர்த்தி ரவியின் பதிவு கவனம் பெற்றுள்ளது...

நடிகர் ரவி மோகன் மனைவி ஆர்த்தியின் பதிவு வைரலாகியுள்ளது.
நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி இணை விவாகரத்து பெற நீதிமன்றத்தை நாடியுள்ளனர். அதிகாரப்பூர்வமாக இன்னும் விவாகரத்து வழங்கப்படாத நிலையில் ரவி மோகன் பாடகி கெனிஷாவுடன் வாழ்ந்து வருகிறார். தற்போது, ரவி மோகன் இயக்கிய ஆன் ஆர்டினரி மேன் என்கிற திரைப்படத்திற்கு கெனிஷா இசையமைத்து வருகிறார்.
இதற்கிடையே, ஆர்த்தி ரவி மறைமுகமாக ரவி மோகனைச் சாடி பதிவுகளை வெளியிட்டு வந்தார். அதற்கு, ரவி மோகன் பதிலடிகளும் கொடுத்தார். பின், சமூக வலைதளங்களில் இருதரப்பினரும் தாக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், ஆர்த்தி ரவி இன்ஸ்டாகிராமில், 'சூர்யா, அஜித், விக்ரம், கமல்... இவங்க எல்லாரையும் விட என் வாழ்க்கையில் வந்த ஒருத்தன் நடிச்சானே நடிப்பு... ஆஸ்கார் விருது கொடுக்கலாம்” எனப் பதிவிட்டிருந்தார். இப்பதிவின் மூலம் ஆர்த்தி நடிகர் ரவி மோகனைத்தான் தாக்குகிறார் என சமூக வலைதளங்களில் இதனைப் பகிர்ந்து வருகின்றனர்.
A post by Aarthi, the wife of actor Ravi Mohan, has gone viral.
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.