கிணற்றில் விழுந்த தொழிலாளி 22 மணி நேரத்துக்கு பின் மீட்பு
வாழப்பாடி:சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் அர்ஜூன், 30. இவர் சேலம் மாவட்டம் வாழப்பாடி, சந்திரப்பிள்ளை வலசை
மாநிலத்தை சேர்ந்தவர் அர்ஜூன், 30. இவர் சேலம் மாவட்டம் வாழப்பாடி,
சந்திரப்பிள்ளை வலசை சேர்ந்த ராமு, 40, என்பவரிடம், 'போர்வெல்'
தொழிலாளியாக பணிபுரிகிறார். நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு
அவரை காணவில்லை.
இந்நிலையில் நேற்று மாலை, 4:10 மணிக்கு, அதே
பகுதியை சேர்ந்த வெங்கடாசலம் என்பவருக்கு சொந்தமான, 80 அடி ஆழ
விவசாய கிணற்றில் சத்தம் கேட்டது. மக்கள் பார்த்தபோது, அர்ஜூன் தவறி
விழுந்து, 10 அடி நீரில் தத்தளித்தது தெரிந்தது.
அங்கு விரைந்து வந்த, வாழப்பாடி தீயணைப்பு துறையினர், கிணற்றில் இறங்கி
வலை மூலம், ஒரு மணி நேரம் போராடி, மாலை, 5:20 மணிக்கு தொழிலாளியை
மீட்டனர். இதன்மூலம், 22 மணி நேரம் தத்தளித்த அர்ஜூன், உயிருடன்
மீட்கப்பட்டார். சிறு காயங்கள் இருந்ததால், வாழப்பாடி அரசு
மருத்துவமனையில் சேர்த்தனர். வாழப்பாடி போலீசார்
விசாரிக்கின்றனர்.