அரசு ஊழியர் சங்க மாவட்ட பேரவை கூட்டம்
சிவகங்கை:சிவகங்கையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட பேரவை கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் மாரி தலைமை வகித்தார். இணை செயலாளர் சின்னப்பன் தீர்மானம் வாசித்தார். துணை தலைவர் பாண்டி வரவேற்றார்.
இடைநிலை ஆசிரியர் சங்க மாநில பொது செயலாளர் சங்கர் துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் வேலை அறிக்கை வாசித்தார். மாவட்ட தணிக்கையாளர் விஸ்வநாத் பிரதாப் பாண்டியன் வரவு செலவு அறிக்கை வாசித்தார்.
அனைத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் வடிவேல், தமிழ்நாடு அனைத்து சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் பாண்டி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் நாகராணி, தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சகாயதைனேஷ், கால்நடை ஆய்வாளர் சங்க மாவட்ட செயலாளர் மரியஅருள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மயில் நிறைவுரை ஆற்றினார். சிவகங்கை புதிய கலெக்டர் அலுவலக கட்டும் பணியை விரைந்து துவக்க வேண்டும். சிவகங்கையில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். கருணை அடிப்படை பணி நியமனங்களை பழைய முறைப்படி அமல்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர். மாநில செயற்குழு கோபால் நன்றி கூறினார்.