Science and technology
இனி யார் வேண்டுமானாலும் டிசைனர் ஆகலாம்! - ஜியோ யூசர்களுக்கு 12 மாத இலவச கேன்வா சந்தா

லட்சக்கணக்கான பிரீமியம் டெம்ப்ளேட்டுகள், புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஃபான்ட்கள் இதில் கிடைக்கின்றன.
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, உலகின் முன்னணி வடிவமைப்புத் தளமான கேன்வா (Canva) உடன் இணைந்து ஒரு புதிய பார்ட்னர்ஷிப் அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான ஜியோ பயனர்கள், செயற்கை நுண்ணறிவு (AI) வசதி கொண்ட கேன்வா புரோ (Canva Pro) மற்றும் கேன்வா புரோ லைட் (Canva Pro Lite) அக்கவுன்டுகளுக்கு 12 மாதங்களுக்குக் கட்டணமின்றி இலவசமாகப் பெற முடியும். இதன் மதிப்பு ரூ. 4,000 வரை ஆகும்.
இந்தச் சலுகையானது செப்டம்பர் 16, 2026 முதல் நடைமுறைக்கு வருகிறது. தகுதியுள்ள ரீசார்ஜ் திட்டங்களைப் பயன்படுத்தும் ஜியோ பயனர்கள் 'மைஜியோ' (MyJio) செயலி வழியாக எந்தவிதக் கூடுதல் கட்டணமுமின்றி சில நொடிகளில் இந்தச் சலுகையைக் கோரிக் கொள்ளலாம்.
ரூ. 399 திட்டம்: இந்தத் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு முழுமையான Canva Pro சந்தா இலவசமாகக் கிடைக்கும்.
ரூ. 349 மற்றும் 2 GB/நாள் திட்டங்கள்: ரூ. 349 திட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட 2 GB/நாள் டேட்டா வழங்கும் திட்டங்களைப் பயன்படுத்தும் பயனர்களுக்கு Canva Pro Lite சந்தா இலவசமாக வழங்கப்படும்.
மாணவர்கள், கிரியேட்டர்கள், தொழில்முனைவோர்கள் மற்றும் சிறு வணிக நிறுவனங்கள் தங்களது திட்டங்கள், சமூக ஊடகப் பதிவுகள், விளக்கக்காட்சிகள் (Presentations) மற்றும் விளம்பரப் பொருட்களை எளிதாக உருவாக்க இந்தச் சலுகை பயன்படுகிறது.
இந்தத் தளத்தில் இந்தி உட்பட பல்வேறு இந்திய மொழிகளில் வடிவமைப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், லட்சக்கணக்கான பிரீமியம் டெம்ப்ளேட்டுகள், புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஃபான்ட்கள் இதில் கிடைக்கின்றன.
கேன்வா புரோ லைட் மற்றும் புரோ - வேறுபாடுகள்:
கேன்வா புரோ லைட் (Canva Pro Lite): பேக்ரவுண்ட் ரிமூவர், 3 பிராண்ட் கிட்கள், மேஜிக் ரீசைஸ், மேஜிக் எரேசர், அச்சிடத் தயாரான எக்ஸ்போர்ட் வசதிகள் மற்றும் 50 GB சேமிப்பகம் (Cloud Storage) ஆகியவற்றைக் கொண்டுள்ளது.கேன்வா புரோ (Canva Pro): புரோ லைட்டின் அனைத்து வசதிகளுடன் சேர்த்து, 5 பிராண்ட் கிட்கள், சமூக ஊடகப் பதிவுகளைத் திட்டமிடும் 'கான்டென்ட் பிளானர்', உரையாடல் வழியிலான AI வடிவமைப்புத் கருவிகள், அதிக அளவிலான AI வரம்புகள் மற்றும் 100 GB சேமிப்பகம் போன்ற கூடுதல் வசதிகளை வழங்குகிறது.
இந்தியாவில் உள்ள அனைவரிடமும் டிஜிட்டல் படைப்பாற்றலைக் கொண்டு சேர்க்கும் நோக்கில் இந்தச் சலுகை தொடங்கப்பட்டுள்ளது என்பதால் இந்த காம்போ யூசர்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
