Economy, business and finance
கறிக்கடை உரிமையாரிடம் மிரட்டி பணம் பறித்த ஒருவர் கைது
வானுார்: ஆரோவில் அருகே கறிக்கடை உரிமையாளரை பணம் கேட்டு மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஆரோவில் அடுத்த இடையஞ்சாவடி கிராமத்தை சேர்ந்தவர் வீரப்பன் மகன் அன்பழகன், 41; கறிக்கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 11ம் தேதி திருச்சிற்றம்பலம் ஏரிக்கரை வழியாக சென்றுள்ளார்.
அப்போது அங்கு பைக்கில் வந்த திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதியை சேர்ந்த மோகன் மகன் அசோக், 21; விஜயபாபு மகன் ராகுல், 21; ஆகிய இருவரும், அன்பழகனை வழிமறித்து, குடிக்க பணம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் தர மறுத்ததால், ஆத்திரமடைந்த இருவரும், நாங்கள் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசனை கொலை செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும், நீ பணம் தரவில்லை என்றால், உன்னையும் வெட்டி விடுவோம் என மிரட்டல் விடுத்து, அவரிடம் இருந்து ரூ. 500 பணத்தை பறித்து சென்றனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இந்த சம்பவம் குறித்து, ஆரோவில் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, அசோக் என்பவரை கைது செய்னர்.