விநாயக சதுர்த்தி
ஸ்ரீவில்லிபுத்துார், செப். 12- கிருஷ்ணன்கோவில் லிங்கா சி.பி.எஸ்.இ. பள்ளியில் விநாயக சதுர்த்தி பூஜை பள்ளி
கிருஷ்ணன்கோவில் லிங்கா சி.பி.எஸ்.இ. பள்ளியில் விநாயக சதுர்த்தி பூஜை பள்ளி தலைவர் அறிவழகி தலைமையில் நடந்தது. இயக்குனர்கள் சசி ஆனந்த், அர்ஜுன் கலசலிங்கம், பள்ளி முதல்வர் அல்கா சர்மா முன்னிலை வகித்தனர். மாணவர்கள் விநாயகர் வேடமணிந்து பங்கேற்றனர். ஏற்பாடுகளை பள்ளி அலுவலர்கள், ஆசிரியர்கள் செய்திருந்தனர்.