Crime, law and justice
ஒன்றரை வயது பெண் குழந்தை கழுத்தறுத்துக் கொலை - தாய் கைது

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே குடும்பத் தகராறில் ஒன்றரை வயது பெண் குழந்தையை கழுத்தறுத்துக் கொலை செய்த தாயை போலீசார் கைது செய்தனர்.
மலையின்கீழு பகுதியைச் சேர்ந்த அபிஜித் என்பவரின் மனைவியான கிறிஸ்டி நீண்ட நேரம் வீட்டை விட்டு வெளியே வராததால் உறவினர் வந்து பார்த்தபோது, தரையில் ரத்தக் காயங்களுடன் குழந்தை கிடந்துள்ளது. குழந்தையைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்ளவிருந்ததாக கிறிஸ்டி கூறியுள்ளார்.
உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, கிறிஸ்டியை கைது செய்து விசாரித்தபோது, தாய் வீட்டுக்குச் செல்ல கணவன் அனுமதிக்காததால் இவ்வாறு செய்ததாக வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
