Politics
இன்றைய செய்திகள் செப். 4 - நேரலை!

இன்றைய செய்திகள், முக்கிய அறிவிப்புகள் மற்றும் உடனடி நேரலை அப்டேட்களை அறிய இணைந்திருங்கள் - தினமணியுடன்...
பாபநாசம் அணையிலிருந்து உடனடியாக தண்ணீர் திறந்துவிட வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இசக்கி சுப்பையா விவகாரத்தில் பேரவைக் கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதிலை அறிவிப்பேன் என்று பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டையில் இல்லாத ஒரு டயர் தொழிற்சாலையை மூடுவது குறித்து பேரவையில் விவாதம் நடைபெற்றது குறித்து தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்.
பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவிப்புகள் வெளியிடுவது அனைத்து முதல்வர்களும் பின்பற்றிய நடைமுறைதான். அனைத்து கேள்விகளுக்கும் முதல்வரே பதிலளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன், தன்னுடைய சகோதரர் மற்றும் அவரது மனைவியை தாக்கிய வழக்கில், புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகி குற்றப்பத்திரிகையை பெற்றுகொண்டார்.
நேபாள பெரு வெள்ளத்தில் சிக்கி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், 9 நாள்களுக்குப் பின் மீட்கப்பட்ட சஞ்சய் ஷா, தான் ஹரே கிருஷ்ணா எனும் மகா மந்திரத்தையே உச்சரித்துக் கொண்டிருந்ததாக தன்னை மீட்டவர்களிடம் கூறியிருக்கிறார்.
ஜிஎஸ்எல்வி-எஃப் 17 ராக்கெட் இந்திய விண்வெளித் துறையின் வளர்ந்து வரும் திறன்களின் பிரதிபலிப்பு என பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 1,290 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியா்கள் 275 போ் உள்பட 4,798-க்கும் மேற்பட்டோா் நிலை என்ன என்பது இதுவரை தெரியாத சூழலில், அவா்களைத் தேடும் பணி வெள்ளிக்கிழமை 10-ஆவது நாளாக தொடா்கிறது.
கிருஷ்ண ஜெயந்தி திருநாளை முன்னிட்டு, தமிழ்நாட்டு மக்களுக்கு, முதல்வர் சி. ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.