Economy, business and finance
சென்னையில் காற்றாலை மாநாடு அக்.,7 முதல் 3 நாட்கள் நடக்கிறது

சென்னை: ''நாட்டின் முதன்மையா ன காற்றாலை மின்சார வர்த்தக கண் காட்சி மற்றும் மாநாடான, 'விண்டர்ஜி இந்தியா 2026' அக்., 7ம் தேதி முதல், 9ம் தேதி வரை சென்னை வர்த்தக மையத்தில் நடக்கிறது,'' என, ஐ.டபிள்யூ.டி.எம்.ஏ., எனப் படும் இந்திய காற்றா லை மின் சாதன உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது .
சென்னையில் அதன் துணை தலைவர் சரவணன் மாணிக்கம் நேற்று அளித்த பேட்டி:
இந்தி யாவின் காற்றாலை மின் நிலைய நிறுவுதிறன், கடந்த ஐந்து ஆண்டுகளில் வே கமாக வளர்ச்சி கண்டு, 58 ஜிகா வாட்டை எட்டியுள்ளது.
வரும், 2030க்குள், 100 ஜிகா வாட் என்ற இலக்கை எட்டுவதற்கு தீவிர கவனம் செலுத்தப் படுகிறது. இதன் ஒரு பகுதியாக, 'விண்டர்ஜி மாநாடு 2026' சென்னை வர்த்தக மையத்தில் வரும் அக்., 7ம் தேதி முதல், 9ம் தேதி வரை நடக்கிறது.
இதி ல், 350 கண்காட்சி அரங்குகள் மற்றும் 30க்கும் மேற்பட்ட நாடுகளின், 400க்கும் அதிகமான பிரதிநிதிகள், 20,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்க உள்ளனர். பழைய காற்றாலைகளை புதுப்பிக்கும் திட்டம் வாயிலாக தமிழகத்திற்கு புதிய முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன.
நாடு முழுதும் மேம்படுத்தப்பட வேண்டிய, 25.40 ஜிகா வாட் பழைய காற்றாலைகளில், தமிழகத்தில், 7.40 ஜிகா வாட் காற்றாலைகள் அடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.