Arts, culture, entertainment and media
ஊர் தலைவர், மனைவி மீது தாக்குதல் துணை பி.டி.ஓ., உள்பட 6 பேர் மீது வழக்கு

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஊர் தலைவரை தாக்கிய சம்ப-வத்தில், துணை பி.டி.ஓ,, உள்ளிட்ட ஆறு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த வெங்கடசமுத்-திரம் கிராமத்தில் பல்வேறு தரப்பு மக்கள் வசிக்கின்றனர்.
இதில் ஒரு தரப்பை சேர்ந்த கோவிந்தராஜ், 60, ஊர் தலைவராக இருந்து வருகிறார். கடந்த ஆக.,9ல் அவரது தரப்பு சங்கத்துக்கான தலை-வரை தேர்ந்தெடுக்கும் கூட்டம் நடந்தது. இதில் கோவிந்தராஜ் கலந்து கொள்ளவில்லை. இதனால் கோபமடைந்த கிராமத்தை சேர்ந்த கென்னடி, 45, நாகராஜ், 58, வெங்கடேஷ், 33, மணிவண்ணன், 47, பாப்பிரெட்-டிப்பட்டி துணை பி.டி.ஓ., கண்ணன், 50, அரசு பஸ் கண்டக்டர் வேலு, 46, ஆகியோர் சேர்ந்து அன்றிரவு கோவிந்தராஜ் வீட்டுக்கு சென்றனர். அவரது மனைவி ஜெயலட்சுமியிடம், கணவர் ஏன் கூட்டத்துக்கு வரவில்லை என கேட்டு தகராறு செய்தனர். பின்னர் ஜெயலட்சுமி, கோவிந்தராஜை ஆறு பேரும் சேர்ந்து தாக்கியுள்-ளனர்.
இதுகுறித்து ஜெயலட்சுமி ஆக.,9ல் கொடுத்த புகாரின்படி பாப்-பிரெட்டிப்பட்டி போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இருந்தனர். இந்நிலையில் பாப்பிரெட்டிப்பட்டி துணை பி.டி.ஓ., கண்ணன், அரசு பஸ் கண்டக்டர் வேலு உள்ளிட்ட ஆறு பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.