துப்பாக்கிச் சுடுதல் போட்டி: உடுமலை டி.எஸ்.பி., அசத்தல்
உடுமலை: தமிழ்நாடு காவல்துறை சார்பில், அதிகாரிகளுக்கான மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டி, சென்னை மருதம் கமாண்டோ படை துப்பாக்கிச் சுடும் பயிற்சி தளத்தில் நடந்தது.
இதில், உடுமலை டி.எஸ்.பி., தையல் நாயகி, பிஸ்டல் மற்றும் ரைபிள் பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்டு, ஒட்டுமொத்தமாக இரண்டாம் இடத்தை பெற்று, வெள்ளிப் பதக்கம் வென்றார்.
அவரது சிறப்பான துப்பாக்கிச்சுடும் திறமை மற்றும் போட்டியில் வெளிப்படுத்திய சிறப்பான செயல்பாட்டை பாராட்டும் வகையில் திறமைக்கான பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
மாநில அளவிலான காவல்துறை அதிகாரிகளுக்கான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று, திருப்பூர் மாவட்ட காவல்துறைக்கு பெருமை சேர்த்த டி.எஸ்.பி.,தையல் நாயகிக்கு, எஸ்.பி., மற்றும் காவல்துறை அதிகாரிகள், போலீசார் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.