பாலமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வரும் 20ல் படி பூஜை
கரூர்:க.பரமத்தி அருகே, பாலமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வரும், 20ல் படி பூஜை நடக்கிறது.
மாவட்டம், க.பரமத்தி பவித்திரம் பாலமலையில் பிரசித்தி பெற்ற,
பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்கு வரும், 20ம் தேதி காலை,
7:30 மணிக்கு கந்தர் அநுபூதி பாராயணத்துடன் கிரிவலம், 8:30 மணிக்கு
விநாயகர் பூஜையை தொடர்ந்து, அனைத்து படிகளுக்கும், திருப்புகழ் பாடி பூஜை நடக்கிறது.
12:30 மணிக்கு பாலசுப்பிரமணிய மூலவருக்கு, சிறப்பு அபி ேஷகம்
நடத்தப்பட்டு, மஹா தீபாராதனை காட்டப்படுகிறது. பிறகு,
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை,
பாலமலை திருப்புகழ் திருப்படி விழா குழு பக்தர்கள் செய்து
வருகின்றனர்.