Politics
கூனிச்சம்பட்டு ஏரியில் பனை விதை நடும் பணி
புதுச்சேரி: திருக்கனுார் அடுத்த கூனிச்சம்பட்டு ஏரியில் பனை விதை நடும் பணி துவங்கியது.
பிரதமர் மோடி பிறந்த நாளையொட்டி, தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பம் தனசுந்தராம்பாள் சாரிடெபுள் சொசைட்டி சார்பில், திருக்கனுார் அடுத்த கூனிச்சம்பட்டு ஏரிக்கரையில் 5 ஆயிரம் பனை விதைகள் நட முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, ஏரிக்கரையில் பனை விதை நடும் பணியை, அமைச்சர் நமச்சிவாயம் துவக்கி வைத்தார். தனசுந்தரம்பாள் சாரிடெபுள் சொசைட்டி நிறுவனர் ஆனந்தன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், எழிலரசன், பிரவின், சரோஜா உட்பட பலர் கலந்து கொண்டனர். இப்பணியை 125 நாட்களுக்குள் முடிக்க முடிவு செய்யப்பட்டது.