பைபாஸ் லேபே ஆக்கிரமிப்பால் கண்ட இடங்களில் வாகனம் நிறுத்தம்
நாமக்கல்:நாமக்கல் பைபாஸில் உள்ள, லேபேவை ஆக்கிரமித்துள்ளதால், லாரிகள் கண்ட இடங்களில் நிறுத்தி

பைபாஸில் உள்ள, 'லேபே'வை ஆக்கிரமித்துள்ளதால், லாரிகள் கண்ட
இடங்களில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் விபத்து ஏற்படும்
அபாயம் உள்ளது.
பனமரத்துப்பட்டி பகுதி, பொம்மைக்குட்டைமேடு பகுதி, கீரம்பூர்
உள்ளிட்ட பகுதிகளில் நீண்டதுாரம் பயணிக்கும் லாரிகள் நிறுத்தி வைத்து
டிரைவர்கள், கிளீனர்கள் ஓய்வு எடுப்பதற்காக, 'லேபே' எனும் இடம்
ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் வெகுதுாரத்தில் இருந்து ஓட்டிவரும்
லாரிகள் நிறுத்தி, இரவு நேரங்களில் டிரைவர்கள்
ஓய்வெடுத்துக்கொள்வர்.
பொம்மைக்குட்டைமேடு பைபாஸ் சாலையில், 'லேபே' அமைக்கப்பட்டுள்ளது.
அந்த, 'லேபே'வை, அருகில் உள்ள தனியார் நிறுவனத்தினர் ஆக்கிரமிப்பு
செய்து, லாரியை நிறுத்தி வைக்காதபடி, 'நோ பார்க்கிங்' என்ற அறிவிப்பு
பலகையை பல இடங்களில் வைத்துள்ளனர். அதனால், 'லேபே'வில்
நிறுத்தப்படும் பல லாரிகள் பைபாஸில் நிறுத்தப்படுகிறது. அதனால்,
அசுர வேகத்தில் வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கி உயிர் சேதம் ஏற்படும்
அபாய நிலையில் உள்ளது.
எனவே, டிரைவர்களின் நலனை கருத்தில் கொண்டு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள, 'லேபே'வின் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.