Sport
மெஸ்ஸி மேஜிக்: சாம்பியன்ஸ் கோப்பையை முதல்முறையாக வென்ற இன்டர் மியாமி!

சாம்பியன்ஸ் கோப்பையை முதல்முறையாக வென்ற இன்டர் மியாமி அணி குறித்து...
சாம்பியன்ஸ் கோப்பையுடன் இன்டர் மியாமி வீரர்கள். - படம்: ஏபி
அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ நாட்டின் சாம்பியன்களுக்கு இடையே நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பையை இன்டர் மியாமி அணி முதல்முறையாக வென்று சாதனை படைத்துள்ளது.
இந்தப் போட்டியில் லியோனல் மெஸ்ஸி ஒரு கோல், ஒரு அசிஸ்ட் செய்து ஆட்ட நாயகன் விருது வென்றுள்ளார். இந்த வெற்றியுடன் மெஸ்ஸி தனது 49ஆவது கோப்பையைப் பெற்று யாருமே நெருங்காத இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
எம்எல்எஸ் மற்றும் லிகா எம்எக்ஸ் சாம்பியன்கள் ஆண்டுக்கு ஒருமுறை மோதும் இந்த சாம்பியன்ஸ் கோப்பை 2018 முதல் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்தப் போட்டி இன்று அதிகாலை தொடங்கியது.
இன்டர் மியாமி அணி தனது சொந்த மண்ணில் க்ரூஸ் அஜுல் அணியுடன் மோதியது. இந்தப் போட்டியில் 24ஆவது நிமிஷத்தில் லூயிஸ் சௌரஸுன் அசிஸ்ட்டில் மெஸ்ஸி கோல் அடித்தார்.
அடுத்தாதாக இரண்டாம் பாதியில் 81ஆவது நிமிஷத்தில் மெஸ்ஸி அசிஸ்ட்டில் காஸிமிரோ கோல் அடித்து அசத்தினார். இறுதியில் இன்டர் மியாமி 2-0 என அபார வெற்றியைப் பெற்றது.
இந்தப் போட்டியில் இன்டர் மியாமி 6 ஷாட்டுகளில் 3 முறை மட்டுமே இலக்கை நோக்கி அடித்தது. க்ரூஸ் அஜுல் 17 ஷாட்டுகளில் 7 முறை இலக்கை நோக்கி அடித்தும் ஒரு கோல்கூட கிடைக்காதது குறிப்பிடத்தக்கது.
இன்டர் மியாமி அணி முதல்முறையாக இந்த சாம்பியன்ஸ் கோப்பையை வென்றுள்ளது. கடந்த சீசனில் முதல்முறையாக எம்எல்எஸ் கோப்பை வென்றதும் கவனிக்கத்தக்கது.
Messi Magic: Inter Miami wins the Campeones Cup aka Champions Cup for the first time!
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.