Politics
குப்பையை தரம் பிரித்து வழங்க விழிப்புணர்வு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகரில் குப்பையை 4 வகைகளாக தரம் பிரித்து வழங்குவது குறித்து விழிப்புணர்வு
ராமநாதபுரம் நகரில் குப்பையை 4 வகைகளாக தரம் பிரித்து வழங்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் குப்பையை நான்கு வகைப்படுத்தி துாய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பச்சை நிற தொட்டியில் உணவு பொருட்கள், காய்கறிகள் போன்ற ஈரக்கழிவுகளையும், நீல நிறத்தொட்டியில் பேப்பர் அட்டை, பிளாஸ்டிக் கழிவுகளையும், சிவப்பு நிறத் தொட்டியில் நாப்கின் மற்றும் சுகாதார கழிவுகளையும் பிரித்து வழங்க வேண்டும். எலக்ட்ரிக் பொருட்கள், வயர்கள், பல்புகள் போன்றவற்றை புதன்கிழமை தோறும் கருப்பு நிறத் தொட்டியில் வழங்க என கமிஷனர்(பொ) குமரன் தெரிவித்துள்ளார். ––