Politics
மயிலம் பொறியியல் கல்லுாரி மாணவர்கள் அறிமுக விழா
விழுப்புரம்: மயிலம் பொறியியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் அறிமுக விழா நடைபெற்றது.
மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், இணை செயலாளர் வேலாயுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் ராஜப்பன் வரவேற்றார். இயக்குனர் செந்தில் சிறப்புரையாற்றினார்.
சென்னை, ஆக்சென்ச்சர் இந்தியா நிர்வாக இயக்குநர் பால்சுந்தர் சிங், தற்போதைய கால கட்டத்தில் நடைமுறையில் உள்ள முக்கிய தொழில்நுட்பங்கள் குறித்தும், பன்னாட்டு நிறுவனங்களின் வருங்கால எதிர்பார்ப்புகள் குறித்தும் கூறினார்.
பின், முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் வகையில், கல்லுாரியில் இயங்கும் அப்துல் கலாம் மாணவர் சங்கம் சார்பில் மரக்கன்றுகள், மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், மயிலம் செவிலியர் கல்லுாரி முதல்வர் தமிழ்செல்வி, மயிலம் இன்ஸ்டிடியூட் ஆப் ஓட்டல் மேனேஜ்மன்ட் முதல்வர் பாலகிருஷ்ணன் உட்பட துறை தலைவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பேராசிரியர்கள் செய்தனர். முதலாம் ஆண்டு ஒருங்கிணைப்பாளர் ரகுராமன் நன்றி கூறினார்.