ஆர்.எஸ்.புரத்தில் ரசிக்கலாம் இன்டர்நேஷனல் சர்க்கஸ்
குழந்தைகளை குதுாகலப்படுத்தும் இன்டர்நேஷனல் ஒலிம்பியன் சர்க்கஸ், ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் நடக்கிறது.
கடந்த மாதம் 28-ல் துவங்கிய இந்த சர்க்கஸ், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள், 14ம் தேதி வரை நடக்கிறது. இதில் மெக்சிகோ, எத்தியோப்பியா, ஈரான், நேபாளம், மணிப்பூர் உள்ளிட்ட நாடுகள் மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 30-க்கு மேற்பட்ட சர்க்கஸ் கலைஞர்கள் சாகச நிகழ்ச்சிகளை நடத்தி அசத்துகின்றனர்.
2 மணி நேர நிகழ்ச்சியில் ஜாக்கிங், ஜிம்னாஸ்டிக்ஸ், மேஜிக், ஜோக்கர், சாரி பேலன்ஸ், ரிங் டான்ஸ், சைக்கிளிங் உள்ளிட்ட பல விதமான சாகசங்களை செய்து காட்டுகின்றனர்.
மூன்று நாட்களும் காலை 11, 2, 5, 7.30 மணி என 4 காட்சிகள் நடக்கின்றன. டிக்கெட்டுகளை ‘புக் மை ஷோ’ செயலி மூலமாகவும், மாநகராட்சி கலையரங்கத்தில் உள்ள டிக்கெட் கவுன்டரிலும் வாங்கலாம்.