சிறுவர்களுக்கு விளையாட்டு போட்டி
சேந்தமங்கலம்:விநாயகர் சதுர்த்தியையொட்டி, சேந்தமங்கலம், காந்திபுரம் மேற்கு வீதியில் அமைந்துள்ள வெற்றி
சதுர்த்தியையொட்டி, சேந்தமங்கலம், காந்திபுரம் மேற்கு வீதியில்
அமைந்துள்ள வெற்றி விநாயகர் கோவிலில், நேற்று காலை பால், தேன், பன்னீர்
உள்பட வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை
நடந்தது.
தொடர்ந்து, வெற்றி விநாயகர் கோவில் திடலில் குழந்தைகளுக்கான
விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், காந்திபுரம்
பகுதியில் உள்ள பள்ளி குழந்தைகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
வெற்றி பெற்ற சிறுவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. டவுன் பஞ்.,
தலைவர் சித்ரா தனபாலன், ஓய்வு எஸ்.ஐ., நல்லதம்பி உள்பட பலர்
கலந்துகொண்டனர்.