‘தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ -– 2026’
பார்வையாளர்களுக்கு ரூ.150 தள்ளுபடி கூப்பன் ‘தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ – 2026’ வீட்டு உபயோக
‘தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ – 2026’ வீட்டு உபயோக பொருட்களின் கண்காட்சிக்கு வந்த பார்வையாளர்களுக்கு, ‘தினமலர்’ சார்பில், ‘டிராவல் பேர் ஆபர்’ கூப்பன் வழங்கப்படுகிறது. கண்காட்சியை சுற்றி பார்த்து, வீட்டிற்கு செல்லும்போது, ‘டிராப் டாக்ஸி’ செயலில் மூலம் கார் புக் செய்து கொள்ளலாம். ‘தினமலர்’ வழங்கிய கூப்பனில் உள்ள ‘டி.எம்.ஆர்., – 150’ என்பதை உள்ளீடு செய்தால், 150 ரூபாய் தள்ளுபடி பெறலாம்.
மணக்கும் மலையாள ‘சென்ட்’
மணக்கும் மலையாள சென்ட் அரங்கு உள்ளது. இங்கு ஜெர்மனி, கனடா, போர்ச்சுக்கல் உட்பட 16 நாடுகளின் சென்ட் என, 40 வகையான சென்ட் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதை, வாடிக்கையாளர்கள் முகர்ந்து பார்த்து ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். வாடிக்கையாளர்களின் வசதிக்காக, 6 எம்.எல்., சென்ட் 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நீரிழிவு, குதிக்கால் வலி, மூட்டுவலி, முதுகு வலி உள்ளிட்ட உடல் நலம் பாதிக்கப்பட்டோர் பயன்பெறும் வகையில், டயாபெடிக் மற்றும் ஆர்த்தோபெடிக் காலணிகள், கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. வயதானோர் இந்த அரங்கிற்கு சென்று, தங்களுக்கு ஏற்ற காலணிகளை விரும்பி வாங்கி செல்கின்றனர்.
இளம் பெண்களை கவரும் வகையில், 1,000 ரூபாய் தள்ளுபடியில், கோஸ்கி சேலைகள் விற்பனை செய்யப்படுகின்றன. என்னெற்ற மாடல்களில் உள்ள இந்த சேலைகளை, இளம்பெண்கள் முதல் மூதாட்டி வரை ரசித்து வாங்கி செல்கின்றனர்.