ஏரோபிக்ஸ் போட்டியில் பரணி வித்யாலயா பள்ளி சாம்பியன்

கரூர்:கரூர் பரணிபார்க் வித்யாலயா பள்ளி, மாநில ஏரோபிக்ஸ் போட்டியில், 9வது ஆண்டாக சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது.
ஹிப் ஹாப் ஏரோபிக்ஸ் சங்கம் சார்பில், நாமக்கல் மாவட்டம்
திருச்செங்கோட்டில், மாநில அளவிலான ஏரோபிக்ஸ் போட்டி நடந்தது.
அதில், மாநிலம் முழுவதிலும் இருந்து, 600க்கும் மேற்பட்ட வீரர்,
வீராங்கனைகள் பங்கேற்றனர். இறுதி சுற்றில் கரூர் பரணி பார்க்
வித்யாலயா பள்ளி மாணவர்கள், ஒன்பதாவது ஆண்டாக மாநில சாம்பியன்
பட்டத்தையும், ஐந்து வெள்ளி, ஐந்து வெண்கல பதக்கங்களை பெற்றனர்.
பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு அகில இந்திய ஏரோபிக்ஸ் விளையாட்டு
சம்மேளன துணைத்தலைவரும், பரணிபார்க் பள்ளி முதன்மை முதல்வருமான
ராமசுப்பிரமணியம், தமிழ்நாடு பிரிவு தலைவர் லதா, செயலாளர் சுரேஷ்,
விவேகானந்தா கல்வி நிறுவன முதல்வர்கள் விஜயகுமார், திருவேங்கடம்
ஆகியோர் சாம்பியன் ஷிப் கோப்பை வழங்கினர்.
வீராங்கனைகளை பரணி பார்க் பள்ளி தாளாளர் மோகனரங்கன், செயலாளர்
பத்மாவதி, அறங்காவலர் சுபாஷினி, முதல்வர் சுதாதேவி, துணை முதல்வர்
பிரியா, தலைமை பயிற்சியாளர் சிவசாமி ஆகியோர் பாராட்டினர்.