முன்விரோதத்தில் தாக்குதல் எட்டு பேர் மீது வழக்கு
பள்ளிப்பட்டு, செப். 16-– நிலம் தொடர்பான முன்விரோதத்தில், தகராறில் ஈடுபட்ட இரு தரப்பைச் சேர்ந்த எட்டு பேர்
நிலம் தொடர்பான முன்விரோதத்தில், தகராறில் ஈடுபட்ட இரு தரப்பைச் சேர்ந்த எட்டு பேர் மீது, போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
பள்ளிப்பட்டு அடுத்த திருமலைராஜிபேட்டையைச் சேர்ந்தவர் கோவிந்தம்மாள், 57. இவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன், 55, என்பவரின் குடும்பத்தினருக்கும் இடையே, நிலம் தொடர்பாக பிரச்னை இருந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ராஜேந்திரனின் மகன் சிவா, 35, மற்றும் அவரது நண்பர்கள் வெங்கடேசன், 43, வெங்கடேசனின் மனைவி ராணி, 40, ஆகியோரும் சேர்ந்து, கோவிந்தம்மாளுடன் தகராறு செய்தனர்.
அப்போது, கோவிந்தம்மாளுக்கு ஆதரவாக சண்முகம், 30, வினோத், 25, சந்திரன், 36, சிரஞ்சீவி, 28, ஆகியோர், எதிர் தரப்பினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பினரும், ஒருவருக்கொருவர் கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது தொடர்பாக, பள்ளிப்பட்டு காவல் நிலையத்தில், இரு தரப்பினரும் புகார் அளித்துள்ளனர். புகாரை பதிவு செய்த போலீசார், இரு தரப்பிலும் தலா நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.