Politics
ராகவேந்திரா பப்ளிக் பள்ளியில் ஆசிரியர் தினம் கொண்டாட்டம்

தலைவாசல்: தலைவாசல், வீரகனுார் ஸ்ரீராகவேந்திரா பப்ளிக் பள்ளியில், குரு-வந்தனம்- - ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தலைவர் லட்சுமி நாராயணன் தலைமை வகித்தார். செயலர் செல்-வராஜூ, கல்வி ஆலோசகர் ராஜா, பொருளாளர் பிரபா, நிர்வாக குழு இயக்குனர் ராஜேஸ்வரி, சிறப்பு நிர்வாக குழு உறுப்பி-னர்கள், பள்ளியின் ஒவ்வொரு ஆசிரியர், முதல்வர் ஜரினா பேகம், நிர்வாக அலுவலர் சங்கரின் அர்ப்பணிப்பு, சேவை, கல்வி பணியை பாராட்டி கவுரவித்தனர்.
குறிப்பாக மாணவர்களுக்கு அறிவு, ஒழுக்கம், நற்பண்பு, தன்னம்-பிக்கை, சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்களிப்பை, நிர்வாகத்தினர் பாராட்டினர். மேலும் அறிவை விதைத்து அன்பால் வளர்த்து, தலைமுறைகளை மலர செய்ப-வர்கள் ஆசிரியர்கள் என, ராகவேந்திரா பப்ளிக் பள்ளி சார்பில், அனைத்து ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் தின வாழ்த்து தெரிவிக்-கப்பட்டது.