சாலையெங்கும் குண்டும், குழியும்... வாகன ஓட்டிகள் விழுந்து காயம்
ரயிலில் இப்படியா? கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில், ஒரு பெட்டியில் இருந்து மற்றொரு பெட்டிக்கு செல்லும்
ரயிலில் இப்படியா?
கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில், ஒரு பெட்டியில் இருந்து மற்றொரு பெட்டிக்கு செல்லும் வழியில் குப்பை குவித்து வைக்கப்பட்டுள்ளது. தினமும் பயணிகள் இதே அவதியை சந்தித்து வருகின்றனர். ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
– அபிராமி, காதர்பேட்டை. (படம் உண்டு)
குன்னத்துார் – செங்கப்பள்ளி சாலையில், பவர்ஹவுஸ் பஸ் ஸ்டாப் அருகே தெருநாய்த்தொல்லை அதிகரித்துள்ளது. நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
– கனிராஜ், செங்கப்பள்ளி. (படம் உண்டு)
நாச்சிபாளையம் – புலியாண்டம்பாளையம் சாலை முழுவதும் குண்டும் குழியுமாக உள்ளது. இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் தடுமாறி விழும் நிலை உள்ளது. சாலையை சீரமைக்க வேண்டும்.
– முத்துவேல், நாச்சிபாளையம். (படம் உண்டு)
திருப்பூர் – தாராபுரம் ரோட்டில், சங்கிலிப்பள்ளம் தனியார் வங்கி முன்புறம் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.
– மகேஷ்குமார், தாராபுரம் ரோடு. (படம் உண்டு)
உஷா தியேட்டர் பஸ் ஸ்டாப் அருகே, முனியப்பன் கோவில் முன்புறம் கால்வாய் அடைப்பு ஏற்பட்டுள்ளது. கழிவுநீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்பதால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
– அன்புமகேஷ், கரட்டாங்காடு. (படம் உண்டு)
தியாகி குமரன் காலனி விரிவில், அருள்ஜோதி நகர் கிழக்கு வீதியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.
– ரவி, தியாகி குமரன் காலனி. (படம் உண்டு)
திருப்பூர் அங்கேரிபாளையம் ரோட்டில், பத்மாவதிபுரம் கிழக்கு பகுதியில் குப்பை தேங்கியுள்ளது. அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும்.
– பழனிசாமி, பத்மாவதிபுரம். (படம் உண்டு)
முதலிபாளையம் பிரிவில், வஞ்சியம்மன் கோவில் அருகே கோழி மற்றும் இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. அவற்றை நாய்கள் குதறி சாலையில் இழுத்துச் செல்வதால், அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
– மணிகண்டன், முதலிபாளையம். (படம் உண்டு)
மண்ணரை புதுதேவேந்திரர் வீதியில், பழுதடைந்த போர்வெல் சரிசெய்யப்படாமல், கழற்றப்பட்ட பைப்புகள் அப்படியே கிடந்தன. இது குறித்து ‘தினமலர்’ நாளிதழில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, போர்வெல் சீரமைக்கப்பட்டு மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
– ராம்குமார், மண்ணரை. (படம் உண்டு)
தென்னம்பாளையம் ஸ்கூல் வீதியில், மரங்களுக்குள் மின்கம்பிகள் செல்வதால் மின்விபத்து அபாயம் இருப்பதாக ‘தினமலர்’ நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, மின்வாரிய ஊழியர்கள் மரக்கிளைகளை வெட்டி அகற்றி, அபாயத்தை நீக்கியுள்ளனர்.
– ராதாமணி, தென்னம்பாளையம். (படம் உண்டு)