Politics
பள்ளி ஆசிரியை சஸ்பெண்ட்
மதுரை: பிளஸ் 1 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் ஆசிரியை அருள்மலர், 45, சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மதுரை மாவட்டம், கொண்டையம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 1 படித்த மாணவி, அவரது நோட்டில் மாணவர் ஒருவர் பெயரை எழுதி வைத்திருந்தார். கண்டித்த ஆசிரியை அருள்மலர், மாணவியின் பெற்றோரிடமும் தெரிவித்தார். இதில் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதால், அருள்மலர் மீது வழக்கு பதியப்பட்டது. அவரை முதன்மை கல்வி அலுவலர் தயாளன், நேற்று சஸ்பெண்ட் செய்தார்.