Politics
அம்பேத்கர் சிலை சேதம்-போலீசார் விசாரணை

சிதம்பரம் அருகே சி.கொத்தங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கொத்தங்குடியில் பழமை வாய்ந்த அம்பேத்கர் சிலை உள்ளது. இந்த சிலையை அம்பேத்கர் நினைவு நாள் மற்றும் பிறந்தநாளில் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் செப்டம்பர் 14 திங்கட்கிழமை அதிகாலை மர்ம நபர்கள் சிலைக்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள இரும்பு துண்டை உடைத்து தெருவில் தூக்கி எறிந்து அம்பேத்கர் சிலையை கல்லால் முகத்தில் குத்தி சேதப்படுத்தியுள்ளனர். இதனை அறிந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பெயரில் சிதம்பரம் ஏஎஸ்பி சுபதர்ஷினி தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
