Politics
கண் தான விழிப்புணர்வு பேரணி
சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை சார்பில் கண் தானம் குறித்த விழிப்புணர்வு பேரணி, நேற்று நடந்தது.
இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முன்னாள் டி.ஜி.பி., ஷகில் அக்தர், பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், மருத்துவமனை ‘கார்னியா’ சேவைகள் துணை இயக்குநர் சுதிர், நடிகை கவுதமி, சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை தலைவர் சுரேந்திரன், எலைட் ஆப்டோமெட்ரி கண் மருத்துவ கல்லுாரி முதல்வர் அனுராதா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இடம்: ஆலந்துார்.