Politics
வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அமைச்சரிடம் மனு
விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அமைக்க கோரி த.வெ.க., தென்மேற்கு மாவட்ட செயலாளர் வடிவேல், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்திடம் மனு அளித்தார்.
விக்கிரவாண்டியில் டி.எஸ்.பி., அலுவலகம், தாசில்தார் அலுவலகம், பி.டி.ஓ., அலுவலகம், சட்டம், ஒழுங்கு போலீஸ் ஸ்டேஷன் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் இயங்குகிறது.
இங்கு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இல்லை. இதனால், விக்கிரவாண்டி மற்றும் சுற்று பகுதிகளை சேர்ந்த பெண்கள் புகார், பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளுக்கு விழுப்புரம், செஞ்சி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், விக்கிரவாண்டியில் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டும்.
விக்கிரவாண்டி பஸ் நிலையம் எதிரே உள்ள டாஸ்மாக் கடை எண்:548, உழவர் சந்தையருகே உள்ள கடை எண்: 545, பனமலை உமையாள்புரத்தில் உள்ள கடை எண்கள்: 11514, 11427 ஆகிய 4 கடைகள் பொதுமக்கள், மாணவர்கள், பெண்கள் மற்றும் வியாபாரிகளுக்கு இடையூறாக உள்ளது.
இந்த கடைகள் பள்ளி, கோவில், பஸ் நிலையம், தேசிய நெடுஞ்சாலை அருகே செயல்படுவதால் மக்கள் பாதிப்பதோடு, விபத்துகளும் நடக்கிறது. அதிகாரிகள் ஆய்வு செய்து, மக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விக்கிரவாண்டி, வானுார் தாலுகாக்களை இணைத்து, விக்கிரவாண்டியை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் கோட்டம் உருவாக்கி, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அமைக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை அரசு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என தெரிவித்துள்ளார்.