பெட்ரோல் நிலையங்களில் குளறுபடி அமைச்சர் ரிஸ்வான் அர்ஷத் தகவல்

பெங்களூரு: ''கர்நாடகாவில் உள்ள, 768 பெட்ரோல் விற்பனை நிலையங்களில் வாகனங்களுக்கு எரிபொ ருள் முறையாக வழங்கப்படவில்லை,'' என, அமைச்சர் ரிஸ்வான் அர்ஷத் தெரிவித்தார்.
கர்நாடகாவில் மொத்தம், 5,946 பெட்ரோல் விற்பனை நிலையங்கள் உள்ளன. இவற்றில், வாகனங்களுக்கு முறையான எரிபொருள் வழங்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.
மாநிலத்தின் பல பகுதிகளில் உள்ள, 805 பெட்ரோல் விற்பனை நிலையங்களில் கடந்த ஒரு வாரத்தில் சோதனை நடந்தது.
இதில், 768 நிலையங்களில் வாகனங்களுக்கு பெட்ரோல் விநியோகம் முறையாக வழங்கப்படவில்லை என கண்டறியப்பட்டது. 101 நிலையங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 6.66 லட்சம் ரூபாய் அபராதம் விதிக் கப்பட்டது.
ஒவ்வொரு பெட்ரோல் விற்பனை நிலையமும், ஓராண்டுக்கு ஒரு முறை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.
ஒவ்வொரு பெட்ரோல் நிலையங்களிலும், நுகர்வோரின் உரிமையாளர்கள் குறித்த தகவல்கள் அறிவிப்பு பலகையில் எழுதப்பட்டிருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசி னார்.